பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழை வெளியிட்ட சோழன் பார்வை இதழ்!
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழை வெளியிட்ட
சோழன் பார்வை இதழ்!

சோழன் நியூஸ் டாட் காம்!
சோழன் பார்வை இதழ்,சோழன் நியூஸ் டாட் காம் சார்பில்
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழ் அறிமுக விழா திருச்சி கார்த்தி வைத்தியசாலா வளாகத்தில் நடைபெற்றது.
சோழன் பார்வை இதழ், சோழன் நியூஸ் டாட் காம் ஆசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார். கார்த்திக் வைத்திய சாலா மருத்துவர் கார்த்திக், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் அனைத்தின் தேசிய மருத்துவர் சங்கம் அனைத்திந்திய மாற்றும் முறை மருத்துவ அகாடமி நிறுவனத் தலைவர் சுப்பையா பாண்டியன் பங்கேற்று பேசுகையில், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் கெளரவிக்கும் வகையில் நினைவார்த்த அஞ்சல் தலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் வரலாற்றை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அஞ்சல் அனுப்பும் போது பேரரசர் வரலாறு பேசப்படும் என சோழன் பார்வை சோழன் நியூஸ் டாட் காம் இதழை வெளியிட, சிறுப்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிமுருகன், சிறப்பு ஆசிரியர் பாரதி பொன்னுச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சோழன் பார்வை இதழ் சிறப்பு செய்தியாளர் பாலச்சந்தர், செய்தியாளர்கள் செரி சுகுமார், கார்த்திகேயன், இக்பால் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.


Comments are closed.