பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்!
அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!
பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்!
அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!
திருநெல்வேலி,டிசம்பர் 9:-

நெல்லை மாவட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில், மொத்தம் 56 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கர் பரப்பளவில் 54 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொதிகை அருங்காட்சியகம் பணிகளை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக நிதித்துறை, தொல்லியல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்,டிசம்பர்.9 முற்பகலில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக தொல்லியல் துறை இயக்குநர் து. யதீஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு. அப்துல் வகாப், சங்கரன் கோவில் ஈ. ராஜா, நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜு ஆகியோர் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை, உலகறியச்செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிபடுத்திட, பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில், பொருநை அருங்காட்சியகம் அமைத்திட, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2023- ஆம் ஆண்டு மே மாதம் 18- ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். தமிழக அரசின் பொதுபபணித்துறை சார்பில், மொத்தம் 56 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில் 54 ஆயிரம் சதுர அடியில், ஆதிச்சநல்லூர் தொகுதி A மற்றும் B கட்டடங்கள் 16, 486 சதர அடியில் தரைத்தளம் மற்றும் முதல்தளமும், சிவகளை கட்டடம் 8991 சதுர அடியில் தரைத்தளமும், முதல் தளமும், கொற்கை தொகுதி A மற்றும் B கட்டடங்கள் 17,429 சதுர அடியில் தரைத்தளமும், முதல் தளமும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான கட்டடப்பணிகள் அனைத்தும் முடிவுற்று விட்டன. ஒவ்வொரு கட்டடத்துக்கும் இணைப்புசசாலை அமைக்கவும், அழகுநிறைந்த குளமும், குளத்தின் மீது பாலமும், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீருற்றுகள், சுற்றுச்சூழலுடன் கூடிய திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள், திறந்தவெளி கூட்ட அரங்குகள் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள், மக்களை கவரும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வயதானவர்கள் செனறு பார்க்கும் வகையில்,பேட்டரியால் இயங்கும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மூலம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான, காட்சிப்படுத்தும் கூடங்கள் அமைப்பதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகினறன. மிக விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டுவிடும். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, கண்டு மகிழும் வகையில், வருகிற
20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு பின்னர்,திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று,முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கவும், புதிய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார். இவ்வாறு, அமைச்சர்கள் கேஎன்நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். முன்னதாக விழா நடைபெறவுள்ள இடங்களை, அமைச்சர்கள் இருவரும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செயதனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீ தரன், செயற்பொறியாளர்ள் ஜோசப் ரன்சட், ஸ்ரீ ராம், தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவர் (சபாநாயகர்) இரா. ஆவுடையப்பன், முன்னாள் டி.பி.எம். மைதீன் கான், நெல்லை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சா. ஞான திரவியம், பிரபல கல்வியாளர் ம. கிரகாம் பெல், சமூக சேவகர் அலெக்ஸ் அப்பாவு மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.


Comments are closed.