ஜன நாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் !

ஜன நாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் !

விஜய் நடிப்பில் நாளை(ஜனவரி 9) வெளியாக இருந்த படம் ஜன நாயகன். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு கே.வி.என் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.

அந்த அறிக்கையில், கனத்த இயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள ஒரு சூழலில் ஜனநாயகன் படம் தள்ளிப் போகிறது. இந்த படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவு எங்களில் யாருக்கும் எளிதான ஒன்றல்ல. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவே எங்கள் மிகப்பெரிய பலம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள்

Bismi

லர் கண்டனம் தெரிவித்து சமூக ஊடகங்காலில் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் சிபிராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகன் ரிலீசை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருங்கள்… நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.

இயக்குனர் இசக்கி வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விசயத்தில் ஏன் இழுபறி இதில் அரசியல் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. எப்படி இருக்கிறது? மாநிலத்தில் அரசு அடித்தால் மத்திய அரசிடம் ஜனநாயகன் செல்லவேண்டும். அதைதான் மாநில அரசும் எதிர்பார்க்கிறது. ஆனால் ஜனநாயகன் மத்தியரசிடம் கெஞ்ச விரும்பவில்லை. இருவரும் ஒன்றுதானே என நினைக்கிறானோ என்னவோ தெரியவில்லை. மாநில அரசும் ஜனநாயகன் மத்தியரசிடம் போகட்டும் என எதிர்பார்த்து  காத்திருந்தது. காரணம் அதை வைத்து “பார்த்திர்களா ஜனநாயகன் சங்கி”என கூறி வீழ்த்தலாம் என்று இருந்தது. ஆனால் அவன் சென்றது நீதிமன்றம். இது சரியான முடிவு வர இருக்கும் தேர்தலுக்கு. ஜனநாயகம் வென்றே தீரும் என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகம்  பெரும் ஆபத்தில் உள்ளது. வலுவாக இருங்கள் விஜய் சார் மற்றும் ஜனநாயகன் பட குழுவினர். கொரோனா காலத்தில் நீங்கள் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். கடைசியாக ஒரு முறையாவது நீங்கள் அதைச் செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். படம் எண்ணிக்கி வெளியீடு ஆகுதோ அன்னிக்கி தான் விழா என்று கூறியுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்