- Advertisement -

லாட்ஜ் ஆஃப் ராக் தொண்டு அறக்கட்டளை சார்பில் எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்!

- Advertisement -

திருச்சி ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக் தொண்டு அறக்கட்டளையின் சார்பில், எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதராஸ் மாகாண தலைவர் மேத்தீவு ஜோசப் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வழக்கறிஞர் எம்.லட்சுமணன் வரவேற்புரை வழங்கினார். திருச்சி லாட்ஜ் ஆஃப் ராக் 260 EC, தலைவர் கமலேஷ் மருத்துவ முகாம் குறித்தும், எலும்பு முறிவு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்  பாலசுப்பிரமணியன் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்  மருத்துவர் சாம்சங் டேனியல் ஆகியோர் எலும்புகளை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் கடந்த 30 வருட காலத்தின் சாதனைகளை முரளிதரன் எடுத்துரைத்தார்.

Vagai
Bismi

இறுதியாக திருச்சி லாட்ஜ் ஆப் ராக் இன் மூத்த உறுப்பினர் சுந்தரேசன்  நன்றியுரை வழங்கினார். மேலும் இந்த முகாமில் பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர், லார்ஜ் ஆப் ராகிங் செயலாளர் மகேஷ் கண்ணா, மற்றும் உறுப்பினர்கள் தில்தீஜ்சா, பெரியண்ணன், புகழேந்தி, சேட்டன், பத்ரி, மார்ட்டின், பிரசன்னா, மருத்துவர் கார்த்தி சன், மருத்துவர் தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்