- Advertisement -

எலும்பு, மூட்டு தின இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது!

1

- Advertisement -

எலும்பு, மூட்டு தினத்தை முன்னிட்டு இந்திய எலும்பு மருந்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ரோட்டரி கிளப் மற்றும் அட்லஸ் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். இந்த இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி, ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Vagai
Bismi

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த இருசக்கர வாகனப் பேரணியானது கரூர் பைபாஸ் சாலை, சாஸ்திரி ரோடு, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு மைதானம் வரை சென்று நிறைவடைந்தது. ஹெல்மெட் அணிந்து பயணிக்கவும், சாலைபாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மேலும் விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு தங்களது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்குவதை தடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் குதிரை முன்னே செல்ல இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று பேரணியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. prostafense says

    **prostafense**

    ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்