திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இரத்ததான முகாம் – ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு!
திருச்சி வயலூர் சாலையில் சீனிவாச நகர் பகுதியில் தில்லை மெடிக்கல் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தில்லை மெடிக்கல் சென்டர் மற்றும் மூன் ராக் ரவுண்ட் டேபிள் இந்தியா (108) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், தில்லை மெடிக்கல் சென்டரில் நேற்று நடைபெற்றது.
இதில் வடுகநாதன் பர்மா அண்ணாமலை கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் இளைஞர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் டாக்டர் ரோஷன் ராஜ், தில்லை மெடிக்கல்ஸ் மனோகரன், விநாயக லட்சுமி நாராயணன், பிரேம், விமல் ராஜா, விஷ்வா, செல்லாராம், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.