- Advertisement -

சினிமா கனவோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ‘பிளாக் மெவினா சினி லேப்’: நடிகர் & இயக்குனர் பொன்முடியின் புதிய முயற்சி!

- Advertisement -

சினிமா கனவோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ‘பிளாக் மெவினா சினி லேப்’: நடிகர் & இயக்குனர் பொன்முடியின் புதிய முயற்சி!

 

​திருச்சி:

திரைத்துறையில் 28 ஆண்டுகால அனுபவமும், மேடை நாடகத் துறையில் 20 ஆண்டுகாலப் பயணமும் கொண்ட கலைஞர் பொன்முடி, தற்போது திருச்சியில் புதிய சினிமா பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியுள்ளார். ‘பிளாக் மெவினா சினி லேப்’ (Black Mavina Cine Lab) மற்றும் ‘ஃபீல் குட் ஆக்டிங் ஸ்கூல்’ ஆகிய நிறுவனங்கள் மூலம் திறமையான கலைஞர்களை உருவாக்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார்.

Vagai

​அனுபவமே ஆசான்:

​ஒரு வேப்ப மரத்தடியில் மிகச் சாதாரணமாகத் தனது முதல் வகுப்பைத் தொடங்கிய பொன்முடி, இன்று சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல நடிகை நமிதாவின் கணவர் உட்பட பல மாணவர்கள் இவரிடம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூத்துப்பட்டறை கலைஞர் ‘சந்தமா மணிமேகலை’ அவர்களைத் தனது குருவாகக் கருதும் பொன்முடி, சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி தொழில்நுட்ப நுணுக்கங்களையும் கற்றுத் தருவதில் உறுதியாக உள்ளார்.

​திருச்சியில் ஏன் இந்தப் பயிற்சி?

​திருச்சி மண் பல கலைஞர்களை வாழ வைத்த மண் என்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் அவர், இங்கிருந்து ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ உருவாக வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார். தனது மாணவர் கபிலனுடன் இணைந்து, முறையான மேடைப் பயிற்சி மற்றும் சினிமா நுணுக்கங்களைக் கற்றுத்தர திட்டமிட்டுள்ளார்.

​பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

​சாதாரண நடிப்புப் பயிற்சியோடு நின்றுவிடாமல், இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாணவர்களை அவர் தயார் செய்கிறார்:

Bismi

​நேர மேலாண்மை: ஒரு நிமிடப் படப்பிடிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்பதை உணர்த்தி, இயக்குநருக்கு ஒத்துழைப்பு தரும் சிறந்த நடிகர்களை உருவாக்குதல்.

​தொழில்நுட்ப அறிவு: லைட்டிங் சென்ஸ், கேமரா ஆங்கிள், மற்றும் ஒரு காட்சியை எப்படித் தெளிவாக வெளிப்படுத்துவது போன்ற நுணுக்கங்கள்.

​சுயசார்பு: ஒரு கைபேசியை வைத்தே எப்படித் தரமான படங்களை எடுத்து சர்வதேச விழாக்குகளுக்கு அனுப்புவது என்ற பயிற்சி.

​தயாரிப்பு வழிகாட்டல்: சிறிய முதலீட்டில் ஏமாறாமல் எப்படி ஒரு படத்தை நிறைவு செய்வது என்ற ஆலோசனை.

​சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘விழிசாலி’:

​பொன்முடி இயக்கிய ‘விழிசாலி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சுமார் 50 விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. 90-களில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதில் இருந்த எதார்த்தமான போராட்டங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், காக்கா முட்டை போன்ற உலகத்தரம் வாய்ந்த படைப்பாகப் பாராட்டப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் தரமான சினிமாவை எடுக்க முடியும் என்பதற்குச் சான்றாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

​கல்வி மற்றும் கட்டணம்:

​ஏழை மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்காமல் ஆயிரக்கணக்கிலேயே (சுமார் ₹45,000 – ₹50,000 வரை 3 மாதங்களுக்கு) கட்டணம் நிர்ணயித்துள்ளார். 5 வயது முதல் 50 வயது வரை ஆர்வம் உள்ள எவர் வேண்டுமானாலும் இதில் இணையலாம். 3 மாத காலப் பயிற்சி, 10 நாள் சிறப்பு வகுப்பு மற்றும் ஒரு நாள் தீவிரப் பயிற்சி எனப் பல்வேறு நிலைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

​”உலக சினிமா சந்தை பெரியது. நமது கலைஞர்கள் தியேட்டர் ரிலீஸை மட்டுமே நம்பி இருக்காமல், சர்வதேச தரத்திற்குத் தங்களை உயர்த்திக்கொண்டால் ஆஸ்கார் விருது வரை வெல்ல முடியும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் பொன்முடி.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்