- Advertisement -

பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் – வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்து இருந்தார்.

Bismi

அதன் அடிப்படையில் இன்று பாஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்