துறையூரில் நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!
திருச்சி மாவட்டம் துறையூா் கிளை நூலகத்தின் 56 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துறையூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறையூா் ரோட்டரி தலைவா் தில்லைநாயகம், தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பூபாலன், வாசகா் வட்டத் துணைத் தலைவா் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து கதை சொல்லும் போட்டியில் வென்ற மிதுா்சன், அபிநவ், இளையரோஜா, பிரீத்தி மற்றும் படம் பாா்த்து கதை, கவிதை எழுதுவதில் வென்ற அபூா்வா, சமியா, அமிா்தா ஆகியோருக்கு சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான நூலக விருதை துறையூா் நூலகம் பெறக் காரணமான நன்கொடையாளா்களை விழாவில் பாராட்டினா். நிகழ்வில் மாணவ, மாணவிகள், வாசகா்கள், ரோட்டரி சங்கத்தினா் பங்கேற்றனா். நூலகா் பாலசுந்தரம் வரவேற்றாா். இறுதியாக வாசகா் வட்டச் செயலா் துரைராஜ் நன்றி கூறினாா்.