ரிஷிவந்தியம் தொகுதியில் டிவிஷன் காட்டும் அசோக்குமார், அதிரடி வேட்புமனுத் தாக்கல்!
ரிஷிவந்தியம் தொகுதியில் டிவிஷன் காட்டும் அசோக்குமார், அதிரடி வேட்புமனுத் தாக்கல்!
கள்ளக்குறிச்சி: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகம் (TVK), தனது தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமார், தனது தேர்தல் பிரசாரத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.
மக்கள் சந்திப்பும் வாக்குறுதிகளும்

வேட்பாளர் அசோக்குமார் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், பின்வரும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்:
தொகுதியில் நிலவும் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றவுடன், மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முழுமையாகச் சீர் செய்யப்படும்.
ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற முழு மூச்சில் செயல்படுவேன்.
மேளதாளம் முழங்க வேட்புமனுத் தாக்கல்
நேற்று தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பெரும் பட்டாளமாகத் திரண்ட அசோக்குமார், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாகச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு ரிஷிவந்தியம் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சியினரிடையே எழுச்சியையும் ஏற்படுத்தியது.

உடன் இருந்த முக்கிய நிர்வாகிகள்:
வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்து ஆதரவு தெரிவித்தனர்:
J. சுந்தரமூர்த்தி (மாவட்ட பொருளாளர்)
A. விஜயகுமார் (ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய செயலாளர்)
P. குமார் (சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்)
சஞ்சய்
செந்தில் (மேற்கு ஒன்றியச் செயலாளர்)
பிரபுராஜ் (ஒன்றிய இணைச் செயலாளர்) மற்றும் பல தொண்டர்கள்.
ரிஷிவந்தியம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இந்த அதிரடித் தொடக்கம், மற்ற கட்சி வேட்பாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ குமரகுரு அவர்கள் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் அசோக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்யப்போகும் கூட்டத்திற்குள் இருந்து நகர முடியாமல் தாமதமாக வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
#TamilagaVettriKazhagam #TVK #Rishivandhiyam #Kallakurichi #TVK_Candidate #AshokKumar #Vijay #TamilNaduElection2026 #Politics #RishivandiyamConstituency





Comments are closed.