திருச்சியில் நில மோசடியில் ₹.5 கோடி ஆட்டய போட்ட பாஜக நிர்வாகி கைது!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவராஜன் 50. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம், சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் கோவிலில் பணியாற்றுபவரும், பா.ஜ.க மாநில விவசாய அணி துணைத் தலைவருமான கோவிந்தன் (வயது 56), என்பவர், தேவராஜனுடன் அறிமுகமானார். அவரிடம் தேவராஜன், ஸ்ரீரங்கம் பகுதியில் அநாதை ஆசிரமம் கட்ட நிலம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதை கேட்ட கோவிந்தன் சில நாட்களுக்கு முன், தேவராஜன் வீட்டுக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் தென்னந்தோப்பை காட்டி, தன் அக்கா கணவர் ரங்கசாமிக்கு சொந்தமானது என்றும், அதற்கான விற்பனை அதிகாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அந்த இடத்திற்கு 19 கோடி ரூபாய் விலை பேசி, 4.68 கோடி ரூபாயை முன்பணமாக கோவிந்தன் பெற்றுள்ளார். இந்த தொகையை கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரது வங்கி கணக்கில் தேவராஜன் செலுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நிலத்தை முழுமையாக தனக்கு எழுதித்தர ரெங்கசாமியை அணுகி தேவராஜன் கேட்டுள்ளார், அப்போது தான் கோவிந்தனுக்கும், ரெங்கசாமிக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கோவிந்தனிடம், தேவராஜன் கேட்டபோது, முன்பணமாக வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும், போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் பணத்தை கோவிந்தன் திருப்பித் தரவில்லை. இதையடுத்து கோவிந்தன் தன்னை மோசடி செய்தது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில், தேவராஜன் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி கீதாவையும் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் வாசு, சேகர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்