திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மற்றும் அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2018 முதல் 2021 வரை குறியீட்டுக் களமாக எடுத்துக் கொள்ளப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

- Advertisement -

அதன்படி 2018 ஆம் ஆண்டிற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக 18 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயாக இருந்துள்ளது. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021 ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 2 கோடியே 36 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது.

இதில் அவரது மாத வருமானம், கடன் வாங்கியது உள்ளிட்டவற்றை தவிர அவரின் சொத்து மதிப்பு 92.69 சதவீதம் உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இருவர் பெயரிலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்