இதயநோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் தீர்வு – ப்ரண்ட்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
இதயநோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் தீர்வு – ப்ரண்ட்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
திருச்சி ப்ரண்ட் லைன் மருத்துவமனையில் 73 வயது மூதாட்டிக்கு ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரண்ட் லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மருத்துவர் ராதாகிருஷ்ணன், இதய நோய் சிகிச்சை மருத்துவர் முகமது காசிம் ஆகியோர், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,….
நீரிழிவு, சிறுநீராக பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், இடது வென்ரிக்கில் செயல் இழப்பு உள்ளிட்ட நோய் பாதிப்பினால், மார்பு வலி, மூச்சு திணறுடன் பரிதவித்த 73 வயது மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவரது தமனி ரத்தக்குழாயில் கால்சியம் அதிகமாக படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.


நோயாளியின் வயது மற்றும் பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஸ்டெண்ட் இல்லாத ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமனிகளில் உள்ள கடினமான கால்சியம் படிவுகளை அகற்றுவதற்காக அதிக வேகத்தில் சுழலும் வைர தூள்கள் பூசப்பட்ட ரோட்டாபர் கருவி மூலம் கால்சியம் படிவம் அகற்றப்பட்டு, சிறப்பு பலூனில் பேக்லிடாக்செல் என்ற மருந்து வைக்கப்பட்டு, தமனிக்குள் செலுத்தப்பட்டது. அந்த மருந்து ரத்தக் குழாய்க்குள் வைக்கப்பட்டதும் பலூன் அகற்றப்பட்டது.
இந்த சிகிச்சை மேம்படுத்தப்பட்ட இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் இமேஜிங் உள்ளது மூலம் கண்காணிக்கப்பட்டது. பைபாஸ் சிகிச்சை தவிர்த்து நிரந்தர உலோக ஸ்டன்ட்டை ரத்தக்குழாயில் பொருத்தாமல் தமணியை திறந்த நிலையில் வைத்திருப்பது தான் இந்த சிகிச்சையின் சிறப்பாக கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் தற்போது முழு குணம் அடைந்துள்ளார். சிறந்த உள்கட்டமைப்பு நவீன மருத்துவ உபகரணங்கள் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இருப்பதால் ப்ரண்ட் லைன் மருத்துவமனையில் அனைத்து சவாலான சிகிச்சைகளும் சிறந்த முறையில் சீர் செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் சுப்பராமன், மேலாளர் தியாகு ஆகியோ ர் உடன் இருந்தனர்





Comments are closed.