அம்பேத்கர் விவகாரம் : அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி மற்றும் மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாதர் மார்க் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் மதர்.ஜமால் முகமது வரவேற்புரை வழங்க, தொடர்ந்து மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் மற்றும் SDTU தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் இலியாஸ் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தளபதி அப்பாஸ், மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முபாரக் அலி, பொன்னகர் ரபீக், சதாம் உசேன், இமாம் சாகுல் ஹமீது இன்ஆமி, கிழக்குத் தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முஹம்மது யாசிர், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் சக்கரை மீரான், காஜா மொய்தீன், சுற்றுச்சூழல் அணி தலைவர் ரஹ்மத்துல்லா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, அப்துல் மாலிக், தொண்டரணி மாவட்ட தலைவர் முகம்மது ஆரிப், கல்வியாளர் அணி மாவட்ட செயலாளர் பத்ரு ஜமான், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் உபைத்தூர் ரஹ்மான், சமூக ஊடக அணி மண்டல பொறுப்பாளர் ரியாஸ் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாபு ) நன்றியுரை வழங்கினார்.
Comments are closed.