லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் – ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சி

- Advertisement -

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் – ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சி

 

ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த ஜூலை இரண்டாம் தேதியில் இருந்து இன்று வரைக்கும் சுமார் 20 நாட்களில் சுமார் 10 பேர் ஊழல் தடுப்பு துறையின் மூலமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

குறிப்பாக திருச்சி,துறையூர், திருவள்ளூர் மாவட்டம், வேலூர், சேலம், மணப்பாறை, துவரங்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் என 10க்கும் அதிகமான இடங்களில் ஊழல் தடுப்பு காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு சுமார் 10க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவை பிரிவு அதிகாரிகள், தாசில்தார்கள் போன்றோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

என்பது தொடர்ந்து வரக்கூடிய ஊடக செய்திகளாக இருக்கிறது,

எனவே வரும் நாட்களில் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு சிறைச்செல்வருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்க வேண்டும், குறிப்பாக உயர் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள், காவல்துறை, கல்வித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் இருக்கிறவர்கள் தங்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம், மேலும் பல்வேறு தாலுகா அலுவலகங்களில் முறைகேடு ஆக கையூட்டு ஊழல் பணம் பெற்றவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம், 2 லட்சம் ரூபாய் கையூட்டு செய்து ஊழல் பணத்தை பெற்று இருக்கிறார் என்று சொன்னால்,

பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு ஒரு (ரிஜிஸ்டர்) சார்பதிவாளர் மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லட்சம் நிலம் பதிவு செய்வதில் ஊழல் செய்து கையூட்டு வாங்கிய லஞ்சப்பணம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக திருச்சி, மணப்பாறை, திருவரம்பூர், பெரம்பலூர், கரூர், துவரங்குறிச்சி, மேலூர் போன்ற குறிப்பிட்டு சொல்ல வேண்டும். பல மாவட்டங்களில் பதிவுத்துறை பத்திரப்பதிவு துறையில் பல லட்சம் ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதனை காவல்துறையும், நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஊழல் பேர்வழிகள் உடைய சொத்துக்கள் பறிமுதல் செய்து அதனை அரசுடமையாக்க வேண்டும் என்று ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

முனைவர் பா ஜான் ராஜ்குமார் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சிராப்பள்ளி.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்