திருச்சியிலிருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவை தொடங்கிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்!
திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகின்றது. இந்நிலையில், திருச்சியில் இருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவையை ஏா் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

முற்பகல் 11 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு திருச்சியை அடைந்து, பின்னா் திருச்சியிலிருந்து மீண்டும் பகல் 12.50-க்குப் புறப்பட்டு 1.50 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது. இதுதொடா்பாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் விமான நிலையப் பொது மேலாளா் ஜலால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன மேலாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.




