அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்
அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்
அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற
உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுகூட்டம் நாளை (டிசம்பர் 10) நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் உள்பட மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.இதில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.இதுதொடர்பாக முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டால், வரும் 15-ம் தேதிக்குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Comments are closed.