திருச்சி மாநகரில் நாளை அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் – முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்பு!

முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி அதிமுக களஆய்வு கூட்டம் திருச்சி மாநகரில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கான கள ஆய்வு குழு கூட்டம் நாளை 19.11.2024 செவ்வாய் கிழமை காலை 9:30 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மஹாலில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக பொருளாளர்,
முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பி.தங்கமணி ஆகியோர் பங்கேற்று திருச்சி மாவட்ட கழகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். அது சமயம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கட்சிக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்