- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

- Advertisement -

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு, அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். அவர் 77 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார்.

Bismi

சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் , ‘இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது,   என்றார்.எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க., மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் இன்று.

அ.தி.மு.க., தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் இன்று. இந்த நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் தி.மு.க., அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்