மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!

- Advertisement -

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் ஜனவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறகிறது. அதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர்.

ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

- Advertisement -

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் இம்மாதம் 22 முதல் 24-ஆம் தேதி வரை வலம் வருகிறது. அதன்படி 22-ஆம் தேதி மலைக்கோவில், LIC அலுவலகம், எறும்பீஸ்வரர் கோவில், இந்திரா நகர், திருவறும்பூர் மற்றும் BHEL பகுதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம் கோவில், திருவானைக்காவல், மேலூர், ராமகிருஷ்ணா தபோவனம், வயலூர், சோமரசன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வலம் வர உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை உள்ளிட்ட உடல் வில் ஆதிரேயில் மன்னார்குடி, பேராவூரணி, அறந்தாங்கி, புதுக்கோட்டை 21-இகளில் ஆதியோகி ரதம் வலம் வர உள்ளது. முன்னதாக கடந்த 16 முதல் உள்ளிட்ட பகுதி களில் ஆன்னோர் ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்