‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

0

‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது, இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த காட்சிகளை படமாக்குவதற்காக ரோப் கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி அறுந்து விழுந்தது. இதை பார்த்ததும் சக சண்டை பயிற்சியாளர்களும், ஸ்டண்ட் கலைஞர்களும் சத்தம் போட்டதையடுத்து சூர்யா அங்கிருந்து விலகினார்.

இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்