நல்லா படிக்கணும் நடிகர் சூரி ‘மாமன்’ சூட்டிங் ஸ்பாட் – குழந்தைகள் உற்சாகம்

நல்லா படிக்கணும் நடிகர் சூரி ‘மாமன்’ சூட்டிங் ஸ்பாட் – குழந்தைகள் உற்சாகம்

சூரி நடிக்கும் மாமன் திரைப்படம் தற்போது திருச்சியில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, அந்த வகையில் இன்று திருச்சி, துறையூர் சாத்தனூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றது, அருகிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நடிகர் சூர்யா அவர்களை மிகவும் ஆர்வமாக சந்திப்பதற்கு வருகை தந்தனர், அப்போது நடிகர் சூரி அவர்கள் குழந்தைகளை சந்தித்து, அவர்களிடம் சிரித்து பேசி, நன்றாக படியுங்கள் என்று அறிவுரை கூறி மகிழ்வுடன் குழந்தைகளிடம் குருப்பாக போட்டோ எடுத்துக் கொண்டார்.

*இதையம் படியுங்கள்*

- Advertisement -

சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வருகிறார், ஐஸ்வர்யா லெக்ஷ்மி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார், லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் குமார் கருப்பண்ணன் தயாரிப்பில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிறுவனம், நடிகரின் சமீபத்திய வெளியீடான ‘கருடன்’ படத்தை தயாரித்துள்ளது.

நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், ஹிருதயம், சேஷம் மைக்-இல் பாத்திமா போன்ற மலையாளப் படங்களுக்கும், குஷி,ஹாய் நன்னா போன்ற தெலுங்குப் படங்களுக்கும்  இசையமைத்த
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் , அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கரின் ஒன்ஸ் மோர் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் .
மாமன் படத்திற்கும் இசையமைக்கிறார் .
படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் மஹாராஜா,
லவ் டுடே மற்றும் லப்பர் பந்து புகழ் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் கொட்டுக்காளி மற்றும்
வில்லங்கு புகழ் எடிட்டர் கணேஷ் சிவா ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்