ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்ய வேண்டும் – இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் பிரசாந்த்!

0

நடிகர் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் வருகிறது 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக திருச்சியில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில்…

அந்தகன் திரைப்படம் காமெடி மற்றும் த்ரில்லர் இணைந்த படம். பான் இந்தியா படமாக தமிழில் முதன்முறையாக ஜீன்ஸ் படம்தான் வெளியானது. அதுபோன்று தற்போது எந்தபடம் எடுத்தாலும் அது அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. இந்தபடத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளதுடன், சிரமம் எடுத்து இந்த படத்தை தயாரித்து உள்ளோம். 350 – 400 திரையரங்குகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த படத்தில் கண்பார்வையற்ற நபராக மிகுந்த சிரமம் எடுத்து நடித்துள்ளேன். பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதுடன், இந்த படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என நம்புகின்றோம்.

திரைப்பட ரிவ்யூ கருத்துக்களை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனர் சங்கர் கதைக்கேற்ப நான் தேவைப்பட்டால் நிச்சயம் மீண்டும் இயக்குனர் சங்கருடன் இணைந்து நடிப்பேன்.

தற்போது ஆடியன்ஸ் பல்ஸ் மாறிவிட்டது. முன்பு ஆக்சன் மற்றும் காதல் படங்கள் அதனை பின்தொடர்ந்து நடித்து வந்தோம். 5 வருடத்திற்கு முன்பு கதை மையமாக இருந்தது. தற்போது ஸ்கிரீன் பிளே மையமாக உள்ளது. நல்ல ஸ்கிரீன் ப்ளே உள்ள கதை நல்ல வெற்றியை பெறுகிறது. அதுபோன்ற கதையை தான் எதிர்நோக்கி உள்ளோம்.

- Advertisement -

பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்பதை மக்கள் பார்ப்பதில்லை. கதை மற்றும் ஸ்கிரீன் ப்ளே நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். படத்தில் பாடல்கள் நன்றாக உள்ளது, மக்களுக்கு பிடிக்கும் வகையில் தத்துவம் மற்றும் ரொமான்ஸ், மெலோடிஸ் பாடல்கள் உள்ளது.

காலத்திற்கு ஏற்ப, டெக்னாலஜியும் மாறிக்கொண்டிருக்கும் சமயம். ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

ரீல்ஸ் இல் நீங்களே கேமராமேன், நடிகர், டைரக்டர் ஆகலாம் என்ற பட்சத்தில் கிரியேட்டிவிட்டியை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக உள்ள நிலையில், ரீல்ஸ் பண்ணும் போது பாதுகாப்புடன் அதேநேரம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை அதிகம் செய்து வருகிறேன். இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறேன். தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவும். அது உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் முக்கியம். அவசரமாக வாகனத்தை ஓட்ட வேண்டாம். உங்களுக்கு குடும்பம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.

தி கோட் திரைப்படம் ஒரு சிறப்பான திரைப்படம். மூன்றாம் தேதி இப்படம் குறித்த அப்டேட் வர உள்ளது. இதனை நானும் எதிர்நோக்கி ஆவலுடன் ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன். விஜய் டி கோட் படத்திற்கு வேற லெவல் எக்ஸ்பிரஷன் இருக்கும். நடிகர் விஜய்க்கு எண்டு (end) இருக்காது. அவரது சகோதரராக அவரது நலம் விரும்பியாக அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல்தான் என தேர்வு செய்திருப்பது நல்ல விஷயம். யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு நான் சப்போர்ட் செய்வேன். அது யாராக இருந்தாலும் சரி என்றார்.

திருட்டு வீடியோ என்பது சினிமா துறையை சீரழிக்கும் வகையில் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்திருப்பது நல்லவிஷயம். இதுபோன்று வெளியாகும் படங்களை பார்க்காமல் இருப்பது நல்ல விஷயம். தற்போதைய இளைய சமூகத்தினர் பல விஷயங்களை கற்று இருப்பது என்பது மகிழ்ச்சியான ஒன்று. இளம் நடிகர்கள் நன்றாக நடித்து உங்கள் திறனை வெளிகாட்டுங்கள் என வாழ்த்தினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்