திருச்சியில் நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் மற்றும் திருச்சி நகரத்தார் சங்கம் சார்பில் தொழிலரங்கம் நடைபெற்றது!
நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் அறக்கட்டளையும், திருச்சி நகரத்தார் சங்கமும் இணைந்து நடத்திய “ஸ்டார்ட் அப் & ஸ்டான்ட் அப்” என்ற பெயரிலான தொழிலரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. திருச்சி நகரத்தார் சங்க தலைவர் சுப்ரமணியம் வரவேற்புரை வழங்கினார். ஞானம், டாக்டர் கலைமணி ஆகியோர் தொழிலரங்கத்துக்கு உதவியவர்கள் மற்றும் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினர்.
கோவை லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் தொழில் ஏன் செய்ய வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பி.எல்.ஏ நிறுவனங்களின் இயக்குனர்கள் சுப.அண்ணாமலை, பழ.அண்ணாமலை ஆகியோர் தங்களின் குடும்ப தொழில் மேன்மை குறித்து விளக்கினார்கள். வீ ஸ்டார் டைமண்ட்ஸ் விக்ரம், விஜயகுமார் இருவரும் இளைஞர்கள் தொழில் செய்ய முன்வர வேண்டும் என பேசினர்.
மேலும் தொழில் துவங்குவோம் என்ற தலைப்பில் சேதுராமன் சாத்தப்பன் சிறப்புரையாற்றினார்.
இந்திய அரசின் ஜெம் இணையதளம் மூலம் வணிகம் செய்வது எப்படி என இந்திய அரசின் பயிற்சியாளர் பிரசன்னா விளக்கவுரையாற்றினா. ஸ்டார்ட்அப் தொழில் துவங்க முன்வருவோரை ஊக்குவிக்க என்பிசி அறக்கட்டளை நிர்வாகிகள் பழ.இராமசாமி, சோமசுந்தரம், வி.இராமசாமி, சுப.இராமசாமி ஆகியோர் அடங்கிய குழு நெறிப்படுத்தினர்.
இறுதியில் என்பிசி அறக்கட்டளையின் பழ.ராமசாமி நன்றி கூறினார். இந்த தொழிலரங்கதிற்கான ஏற்பாடுகளை திருச்சி நகரத்தார் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் தியாகராசன், பொருளாளர் சாத்தப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.