திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்!

Bismi

நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது. நகர் பகுதிகளில் ஆட்சேபனையற்ற நிலங்களில், நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் நபர்களுக்கு, பட்டா வழங்குவது தொடர்பாக, கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நித அளவை துறை அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், திருநெல்வேலி மேற்கு புறவழச்சாலை, குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடுதல் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். “தாயுமானவர் திட்டம்” மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று, குடிமைப் பொருட்களை வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், காக்கும் கரங்கள் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்படட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆய்வு நடத்தப்படடது. அணைகளின் நீர் இருப்பு, நீரின் போக்கு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும், குளங்கள், கால்வாய்களை அடிக்கடி பார்வையிடவும், நீர்நிலைகளில் உடைப்பு ஏறபட்டால், அவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீர்வளத்துறைக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். கோட்டாட்சியர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் தங்குவதற்காக, பள்ளி கடடிடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை முன்னதாகவே பார்வையிட்டு, அவை நல்ல நிலையில் இருப்பதை, உறுதிப்படுத்திட வேண்டும். இந்த இடங்களில் மின்சாரம், குடிநீர் வசதி ஆகியன, 24 மணிநேரமும் இருக்குமாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்! என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, நெல்லை மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ராணா,சேரன்மகாதேவி சப்- கலைக்டர் ஆயுஷ் குப்தா,பயிற்சி உதவி கலைக்டர் தவலேந்து, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சரவணன், நெடுஞ்சாலைத்துறைஃகோட்டப்பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் கோவிந்த ராசு உட்பட, பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவர் மாநகரின் பல்வேறு பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்