- Advertisement -

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

- Advertisement -

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்புராம் அவர்கள் தலைமையில் மகாத்மா காந்தி சிலை அருகில் நடைபெற்றது

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு வி. பி. ராம்ஜி என்று பெயரை மாற்றியவுடன் 100 நாள் வழங்கப்படும் வேலையை 125 நாட்களாக உயர்த்தியும் மேலும் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 90% நிதியையும் மாநில அரசு 10% நிதியையும் அளித்து வந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்கப்படும் என்று புதிய சட்டத்தினை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இதனை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொன்னமராவதி காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் 60க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர் இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர் இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவு பெற்றது வருகை தந்த அனைவருக்கும் பொன்னமராவதி நகர நிர்வாகிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்