திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மென்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு!
தமிழ்நாடு மென்பந்து கழகம் (SOFTBALL), மற்றும் திருச்சி மாவட்ட மென்பந்து கழகம் இணைந்து நடத்திய, மாநில அளவிலான ஆண்களுக்கான வீரர்கள் தேர்வு முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருச்சி, ஈரோடு, சேலம், சென்னை, ராணிப்பேட்டை, கரூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து தமிழ்நாடு ஆண்கள் மென்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட அணிகள் தேசிய அளவிலான போட்டிக்கு பயிற்சி முகாம் நடத்தி, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ராஜசேகரன், திருச்சி மாவட்ட மென்பந்து கழக தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் டாக்டர் சத்தியமூர்த்தி, ரகுபதி மற்றும் செயலாளர், துணை செயலாளர்கள், கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதே போல தமிழக பெண்கள் அணிக்கான தேர்வு முகம் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
Comments are closed.