- Advertisement -

நவ.23 திருச்சி வரும் துணை முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு – திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

- Advertisement -

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

இதில் 23.11.2024 சனிக்கிழமை அன்று திருச்சிக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும், துறையூரில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது எனவும், வரும் 27 ஆம் தேதி அன்று பிறந்தநாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும், முதலமைச்சரின் அறிவிற்பிற்கிணங்க வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு அயராது பாடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Vagai
Bismi

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் நாகராஜன், காஜாமலை விஜய், ஶ்ரீரங்கம் ராம்குமார், இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், தில்லைநகர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்