எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

 

நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது

Bismi

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு காமராஜ் நலச்சங்கம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான இயக்கம், ஒற்றுமை நண்பர்கள் குழு மற்றும் வர்த்தக கூட்டமைப்பு பிரிவு ஆகிய அமைப்புகளின் சார்பாக, மனிதாபிமான நோக்கில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த நிகழச்சி நடத்தப்பட்டது.

எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், மருத்துவ உதவிகளுக்கும், பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதால், நல்லுள்ளம் கொண்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,தங்களால் இயன்ற நிதியினை வழங்கினர். இதனை கூடன்குளம் என். ஜெகதீஷ் நடராஜன் ஒருங்கிணைத்தார்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்