கேப்டன் ரத யாத்திரை குறித்து திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

முசிறி, துறையூர் சாலையில்
தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் பத்மபூஷன் கேப்டன் அவர்களின் நல்லாசியுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரத யாத்திரை வருவது, பி எல் ஏ 2 குறித்தும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்
கே எஸ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம், முசிறி நகரகழக செயலாளர் நகர மண்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் பார்த்திபன்
துறை சதீஷ்குமார். சண்முகவேல்,
முசிறி தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில துணை செயலாளர் செந்தில்குமார், திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராகவத் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பேசிக் கையில் முசிறி வருகை தரும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவை திரும்ப பார்க்கும் அளவிற்கு முசிறியில் நமது கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

மாவட்ட பொறுப்பாளர்

ராகவ த் பிரசாத் பேசியதில் கட்சி நிர்வாகிகள் முசிறி சுற்று பயணம் மேற்கொள்ளும் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநில இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், பொருளாளர் எல் கே சதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் வியக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்
மாநிலத் துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் பேசுகையில் பி எல் ஏ 2 படிவத்தை கட்சி நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் விரைவாக முடித்து தர வேண்டும்.
தேர்தல் ஆணையத்திற்கு ஒப்படைக்க இருப்பதால் முசிறி மன்னச்சநல்லூர் லால்குடி துறையூர் நான்கு தொகுதியிலும் விரைந்து அந்தந்த ஒன்றிய செயலாளர்கள் பணியை திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்
திருச்சி வடக்கு மாவட்டத்துக்கு வருகை தரும் தென்னகத்து ஜான்சி ராணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு முசிறியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டத்தை முசிறி தொகுதி வென்று விடுவோம் என்று மனதில் தோன்றும் அளவிற்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை அழைத்து வர வேண்டும்
மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுச் செயலாளர் வருகை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் அனைத்து வீடுகளுக்கும் சென்று வழங்க வேண்டும் .என்று பேசினார்
நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் முசிறி கிழக்கு ஜெயராமன் மேற்கு பிரசாந்த்
தொட்டியம் மேற்கு விஜய் சேகரன் கிழக்கு ரவிக்குமார்
தாத்தையங்கார்
பேட்டை .பாக்யராஜ் சிவமணி
லால்குடி தொகுதி இளையராஜா கருணாகரன்
பேரூர் செயலாளர்கள் தொட்டியம் அர்ஜுனன் காட்டுப்புத்தூர்
மகா மணி மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு முசிறி மன்னச்சநல்லூர் லால்குடி துறையூர் நான்கு தொகுதி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கூட்டத்தின் முடிவில் முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்
கே.குமார் செய்தியாளர் முசிறி


Comments are closed.