தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டி நாடகத்தில் குணச்சித்திர நடிகர் காண விருது பாலமுருகனுக்கும், நாடகக் குழுவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் வேல்முருகனுக்கும் வழங்கப்பட்டது
தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டி நாடகத்தில் குணச்சித்திர நடிகர் காண விருது பாலமுருகனுக்கும், நாடகக் குழுவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் வேல்முருகனுக்கும் வழங்கப்பட்டது
தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றத்தின் சார்பில் 55 ஆவது நாடக விழா பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் மா.வீ.முத்து தலைமையில் கடந்த 21.07.2025 முதல் தினமும் மூன்று நாடகம் என்ற அடிப்படையில் போட்டி நாடகங்கள் நடைபெற்று வருகிறது,
நாடகத்தில் பங்கு கொள்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டு நாடகங்கள் நடத்தி வருகிறார்கள், அந்த வகையில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் நாடகக் கலை மன்றம் குழுவின் சார்பில் பிள்ளையை பெற்றால் கண்ணீர் (அல்ல) சமூக நாடகத்தினை கலைக்குழுவின் நிறுவனர் கதை,வசனம்,பாடல், இயக்கம் பாலமுருகன் தலைமையில், நாடகம் அரங்கேற்றப்பட்டது, அனைத்து நாடகத்திற்கான நேரம் 1.20 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது மூன்று நடுவர்கள் முன்னிலையில் நாடகமானது 22.07.2025 அன்று நடைபெற்றது,
நாடகம் முடிந்ததும் சிறந்த நாடகத்திற்கான விருதும், சிறந்த இயக்குனருக்கான விருதும், குணச்சித்திர நடிகருக்கான விருதும், நாடகக் குழுவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த குணசத்திரத்திற்கான விருது நாடக இயக்குனர் பாலமுருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது,
நாடகக் குழுவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் வேல்முருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் நாடகத்தில் நடித்த அனைவருக்கும் நாடக விழா குழுவின் சார்பில் சான்றிதழ் வழங்கி அனைவரையும் பாராட்டினர், இப் போட்டி நாடகத்தின் முடிவானது 30.07.2025 அன்று தெரிவித்து பரிசுகள் வழங்கப்படும்.
Comments are closed.