- Advertisement -

முப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் முகாம் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

- Advertisement -

முப்படை ( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், 206 வது (SPARSH) ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.

Bismi

மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல், SPARSH ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதார் புதுப்பித்தல், OROP குறைகள் நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே 100 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்முகாமில் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் அலுவலர்கள் பல்வேறு முப்படை ஆவண அலுவலத்தின் அலுவலர்கள் மற்றும் அனைத்து வங்கிகளின் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Vagai

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில்
பாதுகாப்பு கணக்குகள் துறையின் தலைவர் Dr. மயங்க் ஷர்மா,IDAS,
Lt ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், ஜெயசீலன் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் – சென்னை உள்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இம்முகாமில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்காக SPARSH ஓய்வூதிய சேவைகள் வழங்க 5 வாகனங்கள் (Mobile SPARSH VAN) மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்