தனி நபர் ஆக்கிரமிப்பால் ஆறு வருத்துவாரி பாதிக்கப்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து வரவில்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நேரில் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
தனி நபர் ஆக்கிரமிப்பால் ஆறு வருத்துவாரி பாதிக்கப்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து வரவில்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நேரில் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
திருமயம் சந்தைப்பேட்டை சர்வே எண் 596 வெட்டி கண்மாய் தனி நபர் ஆக்கிரமிப்பால் ஆறு வருத்துவாரி பாதிக்கப்பட்ட நிலையில் கண்மாய்க்கு நீர் வரத்து வரவில்லை என்று பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனுக்கள் அளித்தும் 26.6.2025 வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய கூட்டத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் தனி நபர் ஆக்கிரமிப்பு நீர் வழித்தடங்களை மறைக்கப்பட்டுள்ளது என்றும் நீர் வரத்து வாரிகளை தூர்வாரியும் ஆக்கிரம்புகளை அகற்றக் கோரியும் 596 சர்வே எண்ணின் படி நீர்வரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்று 300 ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதற்கு அரசு நிர்வாகம் தனி நபரை பார்க்காமல் விவசாயிகளையும் பொது மக்களையும் ஏறெடுத்து பார்ப்பார்களா என்ற கேள்வி ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து அது வெளியில் கருத்துக்களாக பரிமாறப்பட்டு வருகிறது மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவிற்கு நேரடியாக திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள ஆறு வருத்து வாரியை கண்காணிக்க நேரடியாக வர வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தி எம்.எஸ். கண்ணதாசன் திருமயம்
Comments are closed.