காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா முன்னிட்டு திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா முன்னிட்டு திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமசுப்பு ராம் தலைமையில் திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது, அதனை தொடர்ந்து வள்ளலார் மடத்திற்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு திருமயம் தெற்கு வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பாக மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எஸ் எல் எஸ் அக்பர் அலி, நகரத் தலைவர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் சுப்புராம், தெற்கு வட்டாரத் தலைவர் இராம மணிகண்டன், முன்னாள் வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, வட்டாரத் துணைத் தலைவர் முத்தையா, வட்டார மகளிர் அணி தலைவி மேலூர் பாண்டியன் தம்பதிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன கருப்பன், நகர மகளிர் அணி தலைவி அமராவதி ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கினர் மேலும் இந்நிகழ்ச்சியில் நகர வட்டார நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிருபர் கண்ணன்
Comments are closed.