திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அமமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் வாந்தி வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர். மேலும் மாரீஸ் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரியும், பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் மார்க்கெட் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி மரங்கள் வெட்டபடுவதை கண்டித்தும், மேலும் குறிப்பாக கிட்டத்தட்ட 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான் உட்பட, பல்வேறு வழிகளிலும் மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும், செயல்படாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Bismi

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக
தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்