ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – ரங்கா ரங்கா கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்!

- Advertisement -

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளையும், பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

- Advertisement -

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து நேற்று வழங்கப்பட்ட பட்டு வஸ்திரங்கள், கிளி பூமாலை உள்ளிட்ட ஆபரணங்களை நம்பெருமாள் அணிந்து, மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ரெங்கா, ரெங்கா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலை நிறுத்தப்பட்டது.

இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்