திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் தரிசனம்!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்தடைந்தார். அங்கு காலை 10.30 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். பரமபத வாசல் திறப்பு இன்று இரவு 8 மணியுடன் நிறைவடைகிறது.
Comments are closed.