திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற வீரர்!

- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் “2025” இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 8:00 மணிக்கு துவங்கியது. போட்டியினை மாடுபிடி வீரர்கள் உறுதிமொழிக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் முன் பதிவு செய்து கலந்து கொண்டனர். மாலை 4.50 மணியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

- Advertisement -

7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 681 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டன. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியிலிருந்து நிராகரிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் 31, மாட்டின் உரிமையாளர்கள் 35, மாடுபிடி வீரர்கள் 15, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இரண்டு என 82 பேர் காயம் அடைந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 13 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப்பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் 13 காளைகளை அடக்கிய திருச்சி நவல்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞருக்கு, சிறந்த வீரருக்கான முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்