திருச்சி காஜாமலை பகுதியில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை என திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்!

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

இது குறித்து போராட்டத்தை ஈடுபட்ட மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது..

காஜாமலை பகுதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி சாலைகளில் சாக்கடை நீர் ஆறு போல் ஓடுவதால் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது.
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் குழந்தைகள், முதியோர், பெண்கள் என ஏராளமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் இந்த பகுதி கவுன்சிலர் காஜாமலை விஜியிடம் பலமுறை பொதுமக்கள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் காஜாமலை விஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரியிடமும் மேயரிடமும் பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை திமுக கவுன்சிலர் விஜி மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என மேயர் அன்பழகன் வாக்குறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்