அயோத்தியில் கடவுள் பெயரை சொல்லி நின்றவர்கள் தோற்றுப் போனார்கள். அம்பேத்கர் பெயரை சொல்லி நின்றவர்கள் தான் வெற்றி பெற்றார்கள் – சீமான்!

கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு அடிதடி தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியினர் வந்திருந்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்….

- Advertisement -

மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியுள்ளார். கடவுளைப் பற்றி பேசினால் சொர்க்கத்திற்கு போகலாம் என்கின்றார். உயிரோடு இருப்பவனுக்கு சோறு போடாத கடவுள், செத்த பின் சொர்க்கம் போகலாம் என்றால் என்ன அர்த்தம். சொர்க்கத்தில் என்ன கிடைக்கிறதோ அதெல்லாம் இங்கு கிடைக்க வேண்டும் என போராட வேண்டும் அப்படி போராடிய ஒரு நபர்தான் அண்ணல் அம்பேத்கார்.

அயோத்தியில் கடவுள் பெயரை சொல்லி நின்றவர்கள் தோற்றுப் போனார்கள். அம்பேத்கர் பெயரை சொல்லி நின்றவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். இதில் யார் வலிமையானவர். நாங்கள் யார் பெயரை சொல்ல என கேள்வி எழுப்பினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ். அதை ஆதரித்து பேசியது கருணாநிதி. அனைத்தையும் வரவேற்று விட்டு இன்று நாடும் மக்களும் அதை எதிர்க்கிறார்கள் என்றவுடன் ஜனநாயகத் தன்மை, பன்முகத்தன்மை சிதைந்து விடும் என்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்பது போன்ற ஒரு துரோகம் இல்லை. இந்தியா ஒரே நாடா ? . இந்தியா பல நாடுகளின் ஒன்றியம். இதை எப்படி ஒரே நாடு எனலாம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி கலை கலாச்சாரம், பண்பாடு உணவு பழக்க வழக்கம் உடை என அனைத்தும் வேறுபடும்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்