திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா – அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன அரிய வகை பறவைகளும் வளர்க்கப்பட உள்ளன. மலைகள், காடுகள் கடற்கரை சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவை தத்துரூபமாக அமைக்கப்பட இருக்கின்றன. கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படவும் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கு நடைபெறும் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை இன்னும் விரைவாக முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர்கள் வைரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்