அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் சால்வை அணிவித்து, மலர் கொத்து, புத்தகம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவபதி, கோகுல இந்திரா, திருச்சி மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார், சீனிவாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடிவிங் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், கவுன்சிலர் அம்பிகாபதி, இலக்கிய அணி செயலாளர் பாலாஜி, அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், ஜெயராமன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்