அம்மா நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விழி இழந்தோர் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது!
மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட மகளிரணி செயலாளர் நசிமா பாரிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் சுரேந்திரன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், ரோஜர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.