உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மேஜர் சரவணன் நினைவு தூண், மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்