வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொதுமக்களுக்கு தடை!
மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அணியாப்பூா் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் சிஆா்பிஎப் பயிற்சி கல்லூரியின் கோவை பிரிவினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.
எனவே, அந்தநேரத்தில் இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது. சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Comments are closed.