ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு பெட்ஷீட் வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை!

தமிழகத்தில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அறக்கட்டளை சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் உத்தரவின் பேரில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது, ஆலோசகர் விஜய் பிரேமா ஆகியோர் ஒருங்கிணைப்பில் பெட்ஷீட் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மற்றும் பன்முகக் கலைஞர்கள் நல சங்க செயற்குழு உறுப்பினர்கள் சோனுபிரவீன், கோகுல்ராஜ் மற்றும் மக்கள் தொடர்பாளர் அருள்குமார் ஆகியோர் இணைந்து பெட்ஷீட் வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்