திருச்சி அரசு மருத்துவமனையில் இலவச காது கேளாமை பரிசோதனை முகாம் – காதொலிக் கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு!

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய, குழந்தைகளுக்கான பிறவிக் குறைபாடுகளை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வா் குமரவேல் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தொடக்கி வைத்து மருத்துவா்களுடன் கலந்துரையாடினாா்.

- Advertisement -

முகாமில் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா்கள், அரசு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளை சரிசெய்யும் வழிமுறைகளை விளக்கினா். முகாமில் 6 வயதுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். மருத்துவப் பரிசோதனையில் 11 குழந்தைகளுக்கு காது கேளாமை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவா்களுக்கு காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்துவது தொடா்பாகவும், அறுவைச் சிகிச்சை அவசியமா என்பது குறித்தும் பரிசோதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்