திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணமுடையவர்கள் கூட்டணிக்கு வரலாம் – ஜெயகுமார்!

ஆட்சியிலிருந்து திமுகவை அகற்ற வேண்டுமென எண்ணம் கொண்ட கட்சிகள் எங்களிடம் தான் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

16வது மத்திய நிதி ஆணைய ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கட்சியின் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.

- Advertisement -

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, மத்திய அரசு வசூலிக்கும் வரியில் சரி சமமாக சமச்சீராக மாநிலங்களுக்கு பங்களிக்க வேண்டும். 100 ரூபாய்க்கு 59 ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 41 ரூபாயை மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கிறது. மத்திய அரசிற்கு நிதி ஆதாரத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளன, ஆனால் மாநிலத்திற்கு அவ்வாறு இல்லை. காவல்துறை உள்ளாட்சித் துறை பேரிடர் காலம் என பல்வேறு கடமைகள் உள்ளன. பிரிக்கப்படும் 41% நிதியிலும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணெய் என்பது போல உத்திரபிரதேசத்திற்கு அதிகமாகவும் தமிழகத்திற்கு குறைவாகவும் பிரிக்கப்படுகிறது. எனவே 50% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடனே அதிமுக கூட்டணி அமைக்கும். திமுகவை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறாமல், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள். ஆட்சியில் திமுகவை அகற்ற வேண்டுமென எண்ணம் கொண்ட கட்சிகள் எல்லாம் எங்களிடம் தான் வரவேண்டும். கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமில்லை. எங்களுடன் யார் கூட்டணிக்கு வர வேண்டும், யாரை கூட்டணியில் சேர்ப்பது என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் எனக் கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்