திருச்சியில் குழந்தைகள பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குழந்தைகள பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, “குழந்தைகள் நடை – 2024” எனும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

- Advertisement -

இதில் குழந்தைகள் நலன் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மேஜர் சரவணன் சிலை வெஸ்ட்ரி ரவுண்டானா வழியாக சேவா சங்கம் பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்