குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் – அமைச்சர் சேகர்பாபு!

ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு அரங்கையும், பல்நோக்கு கட்டிடத்தையும் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

- Advertisement -

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், ஜிஎஸ்டி வரியில் தமிழகத்தின் பங்கு அளிக்கப்படாத நிலையிலும், தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காத நிலையிலும் வளர்ச்சி பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிய புதிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அத்தனையும் நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே வலிமை மிக்க தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.

அரசிடம் நிதி இல்லாத நிலையிலும் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்து மக்களின் வாழ்க்கையில் உயர்வை ஏற்படுத்தியிருக்கிறார். கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் திமுக அரசு வேகமாக செயல்பட்டு வருவதற்கான சான்றாகும். எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்